- மாவோயிஸ்டுகள்
- ராகுல்
- மக்கள் போர் கொரில்லா படை
- Pandalur
- வயநாடு
- கேரளா
- மக்கள் யுத்த கொரில்லா படை
- தின மலர்
பந்தலூர்: ராகுல் தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் புகுந்த மாவோயிஸ்டுகள், மக்கள் யுத்த கெரில்லா படையைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் வரும் 26ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று காலை நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், மானந்தவாடி தலப்புழா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கம்பமலை எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் 4 மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் வந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவோயிஸ்டுகள், பொதுமக்களிடம் ஏற்கனவே கம்பமலை எஸ்டேட் வீடுகளை புதுப்பிக்க கோரியதை கேரளஅரசு கண்டு கொள்ளவில்லை. இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவில்லை. எனவே, அனைவரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும். தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என எச்சரித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் கிராமத்தில் புகுந்தது, மக்கள் யுத்த கெரில்லா படையைச் சேர்ந்த மொய்தீன், சந்தோஷ், சோமன் மற்றும் மனோஜ் என்பது தெரியவந்தது. மாவோயிஸ்ட்கள் கம்பமலை பகுதியில் நுழைந்ததை தொடர்ந்து கேரளா தண்டர்போல்டு போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ராகுல் தொகுதியில் புகுந்த மாவோயிஸ்டுகள் மக்கள் யுத்த கெரில்லா படையைச் சேர்ந்தவர்கள்: போலீசார் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.