×

சில மாநிலங்களில் பாஜக துடைத்தெறியப்படும்: காங். பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

டெல்லி: சில மாநிலங்களில் பாஜக துடைத்தெறியப்படும் என்பது தெளிவாகி விட்டதாக காங். பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2வது கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு பலம் பாதியாக குறைக்கப்பட்டுவிடும். பீதியடைந்துள்ள பிரதமர் மோடி முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு வகுப்பு வாத சாயம் பூச மோடி முயற்சி செய்ததாக ஜெய்ராம் குற்றச்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்படாததை எல்லாம் இருப்பதாக கூறினார் மோடி. இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது மக்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையிலேயே காங். அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

The post சில மாநிலங்களில் பாஜக துடைத்தெறியப்படும்: காங். பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,General Secretary ,Jairam Ramesh ,Delhi ,Kang ,PM Modi ,
× RELATED தோல்வி பயத்தில் 150 கலெக்டர்களை அமித்ஷா...