- நிலாச்சோறு திருவிழா
- மானாமதுரை
- சிவகங்கை
- மானாமதுரை சித்திரை திருவிழா
- நிலசோறு திருவிழா
- நிலசோறு
- சிவகங்கை மாவட்டம்
- வீர அழகர் கோவில்
- சித்ராய் திருவிழா
சிவகங்கை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான நிலாசோறு திருவிழாவில் மக்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டு நிலாசோறு உண்டு மகிந்தார்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள வீர அழகர் கோவிலில் 10 நாட்கள் நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் வருகை தந்தனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தார் மண்டக படியில் எழுந்தருளிய வீர அழகரை தரிசித்த மக்கள் 10 நாள் விழாவான நேற்று இரவு மாமிச உணவு சமைத்து உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ வைகை ஆற்றின் நிலா ஒளியில் உண்டு மகிழ்ந்தனர். சந்திரனுக்கு தீபாராதனை காட்டி வணங்கிய மக்கள் குடும்பத்தினருடன் நிலா சோறு உண்டு களித்தனர்.
நிலாச்சோறு திருவிழாவை ஒட்டி வைகை ஆற்றினுள் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ராட்டினம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவிழாவிற்காக 10 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கும் நிலாசோறு வழங்கப்பட்டது.
The post மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய நிலாச்சோறு திருவிழா: நிலவொளியில் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்ச்சி appeared first on Dinakaran.