×

பூவிருந்தவல்லி அருகே தனியார் பல்கலை.,யில் பிரியாணி திருவிழா: 1,500 அடுப்புகளில் 3,000 கிலோ பிரியாணி சமைத்து விநியோகம்

பூவிருந்தவல்லி: சென்னை பூவிருந்தவல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் ஒரே நேரத்தில் 1,500 அடுப்புகளில் 3,000 கிலோ பிரியாணி சமைத்தது அமெரிக்கன் புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் பதிவானது. விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாவியல் துறை சார்பில் நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், இல்லத்தரசிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகத்துடனும் பிரியாணி திருவிழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் ஆற்காடு, ஐதராபாத், சீரக சம்பா, குரியன் உள்ளிட்ட அனைத்து வகையான பிராணிகளை ஆயிரம் அடுப்புகளில் தலா 2 கிலோ பிரியாணி என்ற அளவில் 3,000 கிலோ பிரியாணி சமைத்தனர் . மேலும் அங்குள்ள 10,000 பேருக்கு பரிமாறப்பட்டது.

The post பூவிருந்தவல்லி அருகே தனியார் பல்கலை.,யில் பிரியாணி திருவிழா: 1,500 அடுப்புகளில் 3,000 கிலோ பிரியாணி சமைத்து விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Biryani festival ,Poovindavalli ,Thantalam ,Poovindavalli, Chennai ,Department of Hospitality and Tourism… ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை -கைதான திருமலைக்கு நெஞ்சு வலி