×

சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை கண்காணிப்பாளர்கள் மோதல்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை கண்காணிப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகாரைச் சேர்ந்த கண்காணிப்பாளர் ரஞ்சன் குமாரை, அவினாஸ் பாபு ராவ் என்ற கண்காணிப்பாளர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டிலால் தாக்கியதில் காயமடைந்த ரஞ்சன் குமார் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பணி நிமித்தமாக பேசிக் கொண்டிருந்தபோது வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை கண்காணிப்பாளர்கள் மோதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nungambakkam ,Central Goods ,Service Tax ,Ranjan Kumar ,Bihar ,Avinas Babu Rao ,Dinakaran ,
× RELATED சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை