- மக்களவை
- ஜே. க.
- ப.
- சென்னை
- காங்கிரஸ்
- முன்னாள்
- யூனியன்
- அமைச்சர்
- பி. சிதம்பரம்
- ராஜஸ்தான்
- மோடி
- காங்கிரஸ் கட்சி
- இந்துக்களின்
சென்னை: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ராஜஸ்தானில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி இந்துக்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடும்” என்று விமர்சித்திருந்தார். அதற்கு காங்கிரஸ், INDIYA கூட்டணிக் கட்சிகள் பரவலாக எதிர்வினையாற்றி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏழைகள், நடுத்தர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காங்.தேர்தல் அறிக்கை மதச்சார்பற்றது-ப.சிதம்பரம்
பட்டியல், பழங்குடி, ஓ.பி.சி. பிரிவினர், இளைஞர்கள், பெண்களுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய நம்பிக்கை அளித்துள்ளது. மதச்சார்பற்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு -மக்களுக்கும் சமமான நீதியை வழங்க உறுதிபூண்டுள்ளது. சொத்துகள் மற்றும் வரி தொடர்பான அண்மை பேச்சுகள், பா.ஜ.க.வை பயம் தொற்றிக்கொண்டதை காட்டுகிறது. சொத்துகள் குறித்து ஒரு வார்த்தை கூட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கிடையாது.
3 முக்கிய அம்சங்களை கொண்டது தேர்தல் அறிக்கை
3 முக்கிய அம்சங்களை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
1.பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது,
2.பொருளாதார வளர்ச்சி,
3.ஏழை மக்கள் வருவாயை பெருக்குவது
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மாறாக பா.ஜ.க., மோடியின் கேரண்டி சுவடுகளே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.
The post மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.