×
Saravana Stores

சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக செயல்படும் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெற உள்ள முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான முன்பதிவு வரும் 29ம் தேதி துவங்குகிறது. செப்டம்பரில் பயிற்சி துவங்கி நடைபெறும். பயிற்சி காலம் ஓராண்டாகும். இருபருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.

விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் பயிற்சி கட்டண விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 17 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். www.tncuicm.com என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு திருப்புத்தூர் சாலை, காஞ்சிரங்காலில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் 04575-243995 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai Cooperative Management Centre ,Sivagangai ,Sivagangai Cooperative Management Center ,Sivaganga Zone Cooperative Societies ,Joint Director ,Rajendra Prasad ,Sivaganga Cooperative Management Center ,Tamil Nadu Cooperative Union ,
× RELATED கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு