×

மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை

தேவதானப்பட்டி, ஏப். 25: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி சாவடி தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயசந்திரன்(45). இவர் மது குடிக்க தனது மனைவி ஜெயந்தியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதில் மனமுடைந்த ஜெயசந்திரன் நேற்று முன்தினம் தோட்டத்தில் இருந்த தென்னை மரம் மாத்திரையை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சையில் இருந்த ஜெயசந்திரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயந்தி புகாரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Devdhanapatti ,Jayachandran ,Erumalainayakanpatti Chavadi Street ,Devadanapatti ,Jayanthi ,
× RELATED ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில்...