×
Saravana Stores

21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் உள்ளது: ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான 12-வது சர்வதேச கூட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்தது. இதில் ரஷிய அதிபர் புதின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு ராணுவத்தினர், அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: நிச்சயமாக, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களின் நோக்கம், தீவிரவாதக் குழுக்கள் மட்டுமின்றி, சில நாடுகளின் உளவுத் துறையினரும் கூட, அரசியல் சாசன அடித்தளங்களைத் தகர்த்து, இறையாண்மை கொண்ட நாடுகளை சீர்குலைத்து, இனம் மற்றும் மதங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுகிறது

The post 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் உள்ளது: ரஷ்ய அதிபர் புதின் appeared first on Dinakaran.

Tags : Russian Chancellor Mint ,Moscow ,12th International Meeting on Security Issues ,St. Petersburg ,Chancellor ,Matin ,21st Century ,Dinakaran ,
× RELATED அமைதி வழியையே நாங்கள் விரும்பினோம்;...