×

மனைவியை தாக்கிய கணவர் கைது

மானூர், ஏப். 25: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வடமலாபுரத்தைச் சேர்ந்த சவுந்தராஜன் மகன் விஜயகாந்த் (35). இவருக்கும், நெல்லை மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகேயுள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த சரோஜா (31) என்பவருக்கும் திருமணமாகி ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன. குடும்ப பிரச்சனை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து வந்துள்ளார். இதனால் சரோஜா கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் அழகியபாண்டியபுரம் சமத்துவபுரத்தில் உறவினர்கள் அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இங்கு வந்த விஜயகாந்த், மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மானூர் காவல் நிலையத்தில் சரோஜா கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ கணேசன் விசாரணை நடத்தி விஜயகாந்தை கைது செய்தார்.

The post மனைவியை தாக்கிய கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Manoor ,Vijayakanth ,Soundarajan ,Kadayanallur Vadamalapuram, Tenkasi district ,Saroja ,Samathuvapuram ,Ajayapandiapuram ,Nellai district ,
× RELATED வேலூர் அருகே சித்தேரி பகுதியில்...