×

லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி

சேத்தியாத்தோப்பு, ஏப். 25: சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கணக்கப்பிள்ளை என்கிற ராமலிங்கம்(80). இவர் திமுகவின் மூத்த முன்னோடியும், சேத்தியாத்தோப்பு முன்னாள் திமுக நகர செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியினருகே சைக்கிளில் சென்ற போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த மணல் லாரி ராமலிங்கத்தின் மீது மோதியதில், படுகாயமடைந்தார்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி appeared first on Dinakaran.

Tags : Larry Moti ,DMK ,Chetiathoppu ,Ramalingam ,Kakappillai ,Chethiyathoppu Mettuttheru ,Chethiyathoppu ,Rajiv ,Gandhi ,
× RELATED உச்சிப்புளி அருகே லாரி மோதி பேக்கரி ஊழியர் பலி