×

வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்

மல்லசமுத்திரம், ஏப்.25: வையப்பமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது. மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலையில் மலைக்குன்றின் மீது பாடல் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உச்சி கால பூஜையை தொடர்ந்து, மலையின் தெற்கு பகுதியில் உள்ள கொங்கணசித்தர் குகையில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கிரிவலம் தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

The post வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Vaiyapamalai ,Krivalam ,Mallasamutram ,Chitra Pournami Krivalam ,Vaiyappamalai Subramania Swamy Temple ,Subramania Swamy Murugan ,Vayappamalai ,Chitra Poornami ,
× RELATED டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு