×

பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தேவாலயத்தில் கடந்த 15ம் தேதி சிறுவன் ஒருவன் பிஷப் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கத்தியால் குத்திய சிறுவன் உட்பட இதில் தொடர்புடைய 7 இளம் போராட்டக்கார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள். இது குறித்து காவல்துறை ஆணையர் கூறுகையில், ‘‘இவர்கள் மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை மற்றும் தீவிரவாத கொள்கைகளை கடைப்பிடித்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்த கும்பல் நியூ சவுத் வேல்ஸ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்தையும் அச்சுறுத்தலையும் முன்வைத்துள்ளது”என்றார்.

The post பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bishop ,Sydney ,Sydney, Australia ,
× RELATED யுனைடட் கோப்பை டென்னிஸ் இகாவால் அரையிறுதியில் போலந்து