×
Saravana Stores

டெல்லி ஜந்தர் மந்தரில் மரம், செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் டெல்லி சென்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நதிகள் இணைப்பு, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக இரண்டாவது நாளாக நேற்று ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்த மரங்கள் மற்றும் செல்போன் டவரில் ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரத்தில் ஏறிய அதிகாரிகள் விவசாயிகளை சமாதனப்படுத்தி ஒருவழியாக கீழே இறக்கி விட்டனர். செல்போன் டவரின் மேலே நின்ற இரண்டு விவசாயிகளையும் சுமார் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

The post டெல்லி ஜந்தர் மந்தரில் மரம், செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Jandar Mantar ,Delhi ,New Delhi ,National South Indian River Linking Farmers Union ,President ,Ayyakannu ,Union Government ,Dinakaran ,
× RELATED சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற...