×

கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க விழிப்புணர்வுடன் செயல்படுவோம் : அமைச்சர் உதயநிதி

சென்னை : கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ‘வெப்ப அலை வீசக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் – மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க விழிப்புணர்வுடன் செயல்படுவோம் : அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Chennai ,Udayanidhi Stalin ,Tamil Nadu ,
× RELATED கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடி மதிப்பிலான...