×
Saravana Stores

கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

டெல்லி: கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-வது பெரிய வங்கியாக கோட்டக் மஹிந்திரா உள்ளது. 2022, 23-ம் ஆண்டுகளில் ஆன்லைன் வங்கி சேவைக்கான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A இன் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், கோடக் மஹிந்திரா வங்கி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டு, விலகுமாறு உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறியதாவது; (i) அதன் ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்தல் மற்றும் (ii) ஆன்லைன் மூலம் புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்கவும் கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க தடை இல்லை என்றும், ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kotak Mahindra Bank ,RBI ,Delhi ,Kotak Mahindra ,India ,Dinakaran ,
× RELATED சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண்...