- தாருமாபுரம் ஆதீனம்
- மயிலாடுதுறை
- குடியரசு நுன் கல்வி நிறுவனம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- கலைதல் குடியரசு கல்வி நிறுவனம்
- தருமபுரம்
- ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி
- மயிலாடுதுறை
- தாருமாபுரம் ஆதினா
- மயிலாடுதர
- Icourt
சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மிகவும் பழமையான மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரது உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஒரு புகார் மனு ஒன்றினை அனுப்பி இருந்தார்.
அதன்படி, தருமபுரம் தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ, ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குடியரசு ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் சர்க்கரை நோய், இதய பாதிப்பு இருப்பதால் தொடர்ந்து சிறையில் அவதிப்பட்டு வருவதாகவும், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டிருப்பதால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, குடியரசுவுக்கு ஜாமின் வழங்க முடியாது என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
The post மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!! appeared first on Dinakaran.