×

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம்

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது. ஏப்ரல்.19-ல் வாக்குச் செலுத்திவிட்டு வீடு திரும்பிய ஜெய்சங்கர், அவரது மகள் ஜெயப்ரியாவை 4 பேர் கிண்டல் செய்துள்ளனர். கோயில் விழா தகராறு தொடர்பான வழக்கை வாபஸ் பெறாததை மனதில் வைத்து தரக்குறைவாக பேசி கிண்டல் செய்ததாக புகார் எழுந்தது. ஜெயப்ரியாவை கிண்டல் செய்தது தொடர்பாக அவரது குடும்பத்தினரும், மற்றொரு புறம் கலைமணி குடும்பத்தினரும் மோதல் ஏற்பட்டது. பின்னர் மோதலை தடுக்கச் சென்ற ஜெய்சங்கரின் அண்ணன் மனைவி கோமதி கீழே விழுந்து உள்காயம் அடைந்ததாக காவல் துறை தெரிவித்தது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கோமதி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கலைமணி, ரவி, அறிவுமணி, மேகநாதன், தீபா ஆகியோரை போலீஸ் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தது. கோமதி உயிரிழந்த சம்பவத்துக்கு முன்விரோதம் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை விளக்கமளித்து. வேறு எந்த காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை என்றும் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

The post ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Jaishankar ,Jayapriya ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...