- ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிறப்பு
- துணை
- ஜனாதிபதி
- ஸ்கை அப்பல்லோ மருத்துவம
- பூந்தமல்லி
- ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிறப்பு
- டாக்டர்
- பிரீட்டா ரெட்டி
- நிர்வாக துணைத் தலைவர்
- அப்பல்லோ மருத்துவமனை
- அப்பல்லோ மருத்துவமனைகள்
- ஆயுர்வேத
- சென்னை
- ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிறப்பு
- துணை ஜனாதிபதி
பூந்தமல்லி: வானகரம் அப்போலோ மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆயுர்வேத் சிறப்பு மையத்தை அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக துணைத்தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி திறந்து வைத்தார்.
சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் “ஆயுர்வைத்” எனும் ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிறப்பு மையத்தை அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணைத்தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி நேற்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது, மருத்துவமனை வளாகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த புதிய மருத்துவமனை நோயாளிகளுக்கு முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நீண்ட பாரம்பரிய ஆயுர்வேதத்தை இன்றைய நவீன மருத்துவத்துடன் சேர்த்து மேம்பட்ட மருத்துவ சேவை வழங்கும் வகையில் ஆயுர்வைத் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணை தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அப்போலோ ஆயுர்வைத் என்னும் ஒருங்கிணைந்த ஆயுர்வேத மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.
இதில் புற்றுநோய், தீவிர சீரழிவு நரம்பியல், சிறுநீரகவியல், எலும்பியல் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், நாள்பட்ட நோயிலிருந்து மீண்டும் வருவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும். மிகத் துல்லியமான ஆயுர்வேத சிகிச்சைகளை இதன் மூலம் எளிதில் பெற முடியும். இந்த ஆயுர்வேத மையம், நவீன மருத்துவத்தின் திறன்களை பயன்படுத்தி ஆயுர்வேதத்தின் ஞானத்தையும், தனி மனித ஆரோக்கியத்தையும் தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறது.
நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமன்றி நோயாளிகளுக்கு நல்வாழ்வையும் அளிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது சர்வதேச பிரிவு நோயாளிகளை, குறிப்பாக உலகின் வளர்ந்த நாடுகளில் இருக்கும் நோயாளிகளை வெகுவாக ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் அப்போலோ ஆயுர்வேத மருத்துவமனைகளின் நிறுவனர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் வாசுதேவன், தலைமை நிர்வாக இயக்குனர் ராகுல் ராகவன் மேனன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
The post வானகரம் அப்போலோ மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிறப்பு மையம்: துணைத்தலைவர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.