×

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கோவா-மும்பை இன்று அரையிறுதியில் மோதல்

கோவா: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடந்துவந்தது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட், மும்பை சிட்டி எப்சி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நாக் அவுட் சுற்றில் ஒடிசா எப்சி கேரளாவையும், எப்சி கோவா, சென்னையின் எப்சியையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தன.

2 சுற்றாக நடைபெறும் அரையிறுதியில் ஒடிசா எப்சி-மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட், எப்சி கோவா-மும்பை சிட்டி எப்சி மோதுகின்றன. இதில் புவனேஸ்வரில் நேற்று நடந்த அரையிறுதி முதல் சுற்றில் ஒடிசா எப்சி 2-1 ன மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட்டை வீழ்த்தியது.

இன்று இரவு 7.30 மணிக்கு கோவாவில் நடைபெறும் அரையிறுதியில் எப்சி கோவா-மும்பை சிட்டி எப்சி மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 24 முறை மோதி உள்ளன. இதில் மும்பை 10, கோவா 7ல் வென்றுள்ளன. 7 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

The post ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கோவா-மும்பை இன்று அரையிறுதியில் மோதல் appeared first on Dinakaran.

Tags : ISL Football Series ,Goa ,Mumbai ,Mohan Bagan Supergiant ,Mumbai City FC ,Dinakaran ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால்...