×

ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்துச் சிதறியதால் அதிர்ச்சி; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்துச் சிதறியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரோஸ். கூலி வேலை செய்து வரும் இவர், மணிகண்டன் என்ற மகன், ரேகா என்ற மருமகள், பேரப்பிள்ளைகள் சஞ்சய், சந்தியா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வெயில் காலம் என்பதால் மொட்டை மாடியில் அனைவரும் உறங்க சென்றுள்ளனர். அப்போது ரோஸ் மட்டும் வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டின் உள்ளே இருந்த ஃபிரிட்ஜ் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரோஸ் வீட்டை திறந்து பார்க்கையில், வீடு முழுவதும் தீ பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து மணிகண்டன் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். வீட்டுக்குள் யாரும் இல்லாததால் ஃபிரிட்ஜ் வெடித்ததில் உயிர் சேதம் இல்லை. ஃபிரிட்ஜ் வெடித்து சிதறி வீட்டுக்குள் தீ பிடித்து எரிந்ததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்துச் சிதறியதால் அதிர்ச்சி; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..!! appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Rose ,Melnelli village ,Ranipet district ,Manikandan ,Rekha ,Sanjay ,
× RELATED மயங்கிய பெண்ணுக்கு உதவுவது போல்...