சென்னை: தமிழ்நாடு நேற்று (23-ஏப்ரல்-2024) சாதனை அளவிலான 40.50 MU சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது 13-மார்ச் – 2024 அன்று பதிவு செய்யப்பட்ட 39.90 MU என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இதேபோல், நேற்றைய தின சூரிய மின் உற்பத்தி 5365 மெகாவாட்டும் அதிகமான ஒன்றாகும். 05-மார்ச்-2024 அன்று செய்யப்பட்ட உற்பத்தியே 5398 மெகாவாட், மிக அதிக பட்ச சூரிய மின்சாரம் உற்பத்தியாகும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வீடு, தொழிற் சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் ஒட்டுமொத்த தினசரி மின்நுகர்வு சராசரியாக 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் மின்விசிறி, ஏ.சி. உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 40.50 MU பயன்படுத்தி வருகிறது.
இந்த மின்சாரத்தை மின்கலங்களில் சேமித்து தேவையான போது உபயோகிக்கலாம். இன்று, உலகின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் தெருக்களில் வெளிச்சத்துக்காகவும், கிராமங்களில் நீர்ப்பாசன மோட்டார்களை இயக்குவதற்கும் சூரியக் கலங்கள் வெற்றிகரமாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் குளிர்சாதன பொருட்களை அதிகளவில் பயன்படுகிறார்கள். அதே போல தொழிற்சாலைகளில் அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சராசரியாக பயன்படுத்தும் மின்சார அளவை விட தமிழகத்தில் சூரிய மின்சாரம் அளவு தினசரி அதிகரித்துள்ளது என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல் appeared first on Dinakaran.