×

உடல் பருமன் குறைப்பு சிகிச்சை: புதுச்சேரி இளைஞர் பலி

சென்னை: உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். நேற்று ஹேமசந்திரனுக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் ஹேமசந்திரன் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் ஹேமசந்திரன் குடும்பத்தினர் சென்னை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

The post உடல் பருமன் குறைப்பு சிகிச்சை: புதுச்சேரி இளைஞர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hemachandran ,Bammal, Chennai ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர்...