×

காப்புரிமை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு: பாடல் இசையமைப்பாளருக்கு மட்டும் சொந்தமா? : ஐகோர்ட் கேள்வி

சென்னை: இளையராஜா இசையமைத்த பாடல்கள் காப்புரிமை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமையின்றி இளையராஜா இசையமைத்த பாடல்களை நிறுவனங்கள் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இளையராஜா புகாரின் பேரில் அவரது பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இடைக்கால தடையை நீக்கக் கோரி எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது என இளையராஜா தரப்பு வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்தது தான் பாடல் வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை என்றும் தெரிவித்தார். பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று இளையராஜா தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

The post காப்புரிமை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு: பாடல் இசையமைப்பாளருக்கு மட்டும் சொந்தமா? : ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,CHENNAI ,Ilayaraja ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!:...