×

கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் தர்பூசணி சாகுபடி மும்முரம்

கிருஷ்ணராயபுரம் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கே.பேட்டை பகுதிகளில் விவசாயி சொட்டுநீர் பாசனம் மூலம் தர்பூசணி பழங்களை சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.தர்பூசணி விவசாயம் செய்து நல்ல லாபம் பெறலாம். அடிக்கும் வெயிலுக்கு தாகத்தை தணிக்கும் அரும்மருந்தாக தர்பூசணி விளங்குகிறது. அதிகமாக நீர்சத்து நிறைந்துள்ள இந்த தர்பூசணி பழம் அதிக மருத்துவ குணங்களையும் கொண்டது. சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் உடலின் ஏற்படும் வெப்பத்தை தணிக்க தர்பூசணி பழங்களை மக்கள் அதிகம் சாப்பிடுவதால், தற்போது, கோடை காலங்களில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு அதிக அளவில் குவிய தொடங்கியுள்ளது.தர்பூசணி பயிரிடும்: தர்பூசணி சாகுபடி செய்யும் நிலப் பகுதியை நன்கு உழுது எடுத்து 8 அடி அகலப்பார் அமைக்கவும். பார்களுக்கிடையில் கால்வாய் பிடித்து வைக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ தர்பூசணி விதை தேவைப்படும். கால்வாயிகளுக்கு இடையில் மூன்று அடி இடைவெளியில் தர்பூசணி விதைகளை விதைக்க வேண்டும். ஒரு குத்துக்கு இரண்டு செடிகள் இருக்குமாறு, விதைத்த 15-ஆம் நாள் கலைத்துவிட வேண்டும். தர்பூசணி விதைகளை ஊன்றும் முன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கவும். சொட்டு நீர்ப்பாசனம் நீர்ப்பயன் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் செய்ய பயன்படுகிறது.

தர்பூசணியின் பயன்கள்: கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக உடல் சூட்டை குறைக்கும் பழங்களில் தர்பூசணி முதன்மையானது. தர்பூசணியில் வைட்டமின், தாதுக்கள், கார்போ ஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது. கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும். ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத் தின் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம். நீரிழிவு நோய். இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

கரூர் மாவட்டம், கிரு ஷ்ணராயபுரம் அடுத்த கே.பேட்டை பகுதிகளில் விவசாயிகள் தர்ப்பூசணி பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். கரும்பச்சை நிறத்தில் உள்ள தர்ப்பூசணிகள் இங்கு அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனத்தை கொண்டு சாகுடி செய்யப்படும் இந்த தர்பூசணி பழங்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது.

விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்யும் போது. வியாபாரிகளே தர்பூசணி அறுவடை செய்வதற்கான பணியாட்களையும் அழைத்துக் கொண்டு வந்து தர்பூசணி அறுவடைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் அடுத்த திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.பேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

The post கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் தர்பூசணி சாகுபடி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Karur District ,K.Pettai ,
× RELATED பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள்...