×

தினந்தோறும் வெப்பம் அதிகரிப்பு சித்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் 110 டிகிரி வெயில்

*வெப்ப சலனத்தால் பொதுமக்கள் கடும் அவதி

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் தினந்தோறும் வெப்பம் அதிகரிப்பால் 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தகிக்கும் அனலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் வெயிலுக்கு பெயர் போன்ற ராயல் சீமா மாவட்டங்களில் சித்தூர் மாவட்டம் ஒன்று.

கடந்த ஐந்து நாட்களாக 100 டிகிரி செல்சியஸை தாண்டி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக 110 டிகிரி வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது ஆந்திர மாநில வானிலை மையம் அறிவித்த தகவலின் படி, மேலும் 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.

அவ்வாறு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, குடிநீர் பாட்டிலை எடுத்துச்செல்ல வேண்டுமென அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு சித்தூர் மாவட்டத்தில் 36 மண்டலங்களில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு உள்ளது. இதனால் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கிராமங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் விவசாய நிலத்தில் வேலை செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதிக நேரம் வெயிலில் வேலை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். அதேபோல் மண்டலங்களில் உள்ள சுகாதார மையங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறோம். அதேபோல் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கிராம கிராமமாக சென்று ஒவ்வொரு வீடாக ஓஆர்.எஸ் பாக்கெட்டுகள் வழங்கி வருகிறோம். ஆந்திர மாநில வானொலி மையம் அறிவித்த தகவலின் படி மேலும் ஐந்து நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளது. தற்போது சித்தூர் மாநகரத்தில் 110.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

மேலும் ஐந்து நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆகவே பொதுமக்கள் வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வர வேண்டாம். அவ்வாறு வெளியே வரும்போது கொடை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கண்டிப்பாக எடுத்துக் கொண்டு வெளியே வரவேண்டும். அதிகளவு குளிர்பான குடிநீரான மோர் மற்றும் பழரச வகைகளை பருக வேண்டும். அதேபோல் உணவு சாப்பிடும்போது சிறிதளவு உப்பு கூடுதலாக சேர்த்துக்கொண்டு சாப்பிட வேண்டும் ஏனென்றால் வெயிலின் போது பெயரால் நம் உடலில் உள்ள உப்பு குறைய தொடங்குகிறது.

இதனால் உடல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டு விடும். ஆகவே பொதுமக்கள் உணவு உட்கொள்ளும் போது, சிறிதளவு உப்பை அதிகரித்து உணவு சாப்பிட வேண்டுமென மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சித்தூர் மாநகரத்தில் காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல் மாநகரத்தில் குளிர்பான கடைகளிலும் பழரச கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஏராளமான பொதுமக்கள் மோர் லெமன் ஜூஸ், தர்பூசணி ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு குளிர்பான ஜூஸ்களை பருகி வருகிறார்கள். இதனால் வியாபாரிகளுக்கு வியாபாரம் களைகட்டி உள்ளது. சித்தூர் மாநகரத்தில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளான சர்ச் தெரு, பஜார் தெரு, காந்தி சர்க்கிள் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஏராளமான பொதுமக்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக்கொண்டு வாகன ஓட்டிகள் முகத்திற்கு துணிகளை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதே போல் இரவு நேரங்களில் நகரங்களில் உள்ள பொதுமக்கள் தூங்க முடியாமல் வெப்பத்தின் சலனத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் ஐந்து நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

The post தினந்தோறும் வெப்பம் அதிகரிப்பு சித்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் 110 டிகிரி வெயில் appeared first on Dinakaran.

Tags : Chittoor district ,Chittoor ,Takikum ,Anal ,Royal Seema districts ,AP ,Dinakaran ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...