*சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்காவில் டேலியார் மற்றும் மேரிகோல்டு மலர்கள் பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், கோடை சீசன் சமயங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர்.
இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் மலர் செடிகள் புதிதாக நடவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இந்த மலர் செடிகளில் ஏப்ரல் மாதம் துவக்கம் முதலே மலர்கள் பூத்துக்குலுங்கும். ஆனால், இம்முறை போதிய தண்ணீர் இல்லாத நிலையில், மலர்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூக்காத நிலையில், இத்தாலியன் பூங்காவில் உள்ள பாத்திகளில் மட்டும் தற்போது பல வண்ணங்களில் டேலியா, மேரிகோல்டு உட்பட சில மலர்கள் பூத்துள்ளன. வேறு எங்கும் மலர்கள் இல்லாத நிலையில், இத்தாலியன் பூங்காவில் பூத்துள்ள மலர்களை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
The post இத்தாலியன் பூங்காவில் பூத்த மலர்கள் appeared first on Dinakaran.