- பிரவீன்
- ஷர்மிளா
- ஆணையாளர்
- சென்னை
- வருவாய்
- குறுக்கு வீதி,
- அம்பேத்கர் நகர், பள்ளிக்கரணை, சென்னை
- தின மலர்
சென்னை: ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு அளித்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் நகர் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சாய் கணேஷ் நகரைச் சேர்ந்த ஷர்மிளா (21) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஷர்மிளா தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு, ஷர்மிளா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி, இருவரும் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதால் ஷர்மிளா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், பிரவீணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி இரவு, மதுபான கடை அருகே, ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் உட்பட ஒரு கும்பல், பிரவீனை சூழ்ந்து கொண்டு வெட்டி சாய்த்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்..
இந்த நிலையில் பள்ளிக்கரணை போலீசார் இந்த ஆவண கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் உட்பட ஸ்டீபன், விஷ்ணுராஜ், ஜோதி லிங்கம், ஸ்ரீராம் ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி, ஆணவ படுகொலை, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிரவீன் இழந்து தனிமையில் வாழ்ந்துவந்த ஷர்மிளா கணவன் இறந்த 2 மாதங்களில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த 14 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சர்மிளா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, அதன்படி வீட்டில் உள்ள ஃபேன் கொக்கியில், சுடிதார் துப்பட்டாவால், தூக்கிட்டுள்ளார். இதனைக்கணட அவரை உடனடியாக காப்பாற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து சர்மிளாவை மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த சர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கரணை போலீசார், மருத்துவமனை தகவலின் பேரில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று, ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். பிரவீன் மனைவி ஷர்மிளாவின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் மாமனார், மாமியார், உறவினர்கள் ஆகியோரிடம் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தற்கொலைக்கு பெற்றோர், சகோதரர்களே காரணம் என ஷர்மிளா கடிதம் எழுதியிருந்தார்.
The post ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.