×

சேலம், ஈரோட்டில் கொளுத்தும் வெயில்: 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்

சேலம்: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதில், அதிகபட்சமாக ஈரோடு மற்றும் சேலத்தில் 108.14° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு மற்றும் சேலத்தில் வெப்ப அலை வீசியதாகவும், 108.14° பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெயிலால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே அனாவசியமாக வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், கடலோர மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும். தென்காசி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் கோடை மழையை எதிர்பார்க்கலாம். சென்னையை பொறுத்தவரை மழைக்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

The post சேலம், ஈரோட்டில் கொளுத்தும் வெயில்: 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Salem, Erode ,Collectors ,Salem ,Tamil Nadu ,Erode ,India ,Anandpur ,Andhra Pradesh ,Salem, ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...