×

சூரத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களை போட்டியில் இருந்து பாஜக விலக வைத்தது அம்பலம்!!

சூரத் : சூரத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களை போட்டியில் இருந்து பாஜக விலக வைத்தது அம்பலமாகி உள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, மனுக்களை வாபஸ் பெறுமாறு தாங்கள் விடுத்த வேண்டுகோளை சுயேச்சை வேட்பாளர்கள் ஏற்றதாக தெரிவித்தார். சூரத்தில் காங். வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். வேறு யாரும் களத்தில் இல்லாததால் பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

The post சூரத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களை போட்டியில் இருந்து பாஜக விலக வைத்தது அம்பலம்!! appeared first on Dinakaran.

Tags : Surat ,BJP ,General Secretary ,Vinod Tawde ,Mumbai ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின்...