×

அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

 

மதுரை, ஏப். 24: மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவிற்கு நேர்த்திகடன் செலுத்தும் பங்குனி அமாவாசை முதல் சித்ரா பவுர்ணமி முதல் 15 நாள் விரதம் இருப்பர். இவர்களது விரதம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று முடியும். இதன்பிறகு நேர்த்திக்கடன் செலுத்தி, விரதத்தை முடிக்கும் பக்தர்களில் பெரும்பாலானோர் அழகர்கோவில் வந்து விரதத்தை முடிப்பது வழக்கம். இதன்படி நேற்று கள்ளழகர் நேற்று வைகை ஆற்றில் இறங்கியதும், தீர்த்தவாரியை முடித்த பின்னர் பக்தர்கள் பலரும் அழகர்கோவிலுக்கு வந்தனர்.

அங்கு, தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்கான நேர்த்திகடனை செலுத்தினர். தங்களது வயல்களில் விளைந்த தானியங்களை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். பலரும் மொட்டை போட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து பொங்கல் வைத்தும், தங்களது வேண்டுதலுக்குரிய ஆட்டு கிடாக்களை வெட்டியும், விருந்து வைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

The post அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Alaghar temple ,Madurai ,Panguni ,Chitra Poornami ,Panguni Amavasi ,Chitrai festival ,Madurai Alaghar temple ,Kallaghar river ,
× RELATED வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி