×
Saravana Stores

அரியலூர் அருகே அஸ்தினாபுரம் முருகன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

 

அரியலூர் ஏப் 24:அரியலூர் அருகே உள்ளஅஸ்தினாபுரம் கிராமத்தில் மலேசியாவில் உள்ளது போல் 23 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு திருவிழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினந்தோறும் சுப்பிரமணியசுவாமி பல்வேறு வாகனங்களில் விதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சித்ரா பவுர்ணமி ஆன நேற்று 10ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்வெகு விமர்சையாக நடைபெற்றது.  காலையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பலவித திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மாலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி தேரில் எழுந்தருளினார். முன்னாள் அரசு கொறடா தாமரை.

ராஜேந்திரன், முன்னாள் பாமக அரியலூர் மாவட்ட செயலாளர் சின்னதுரை, அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால்வளத்துறை தலைவர் கல்லங்க்குறிச்சி பாஸ்கர் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க சுப்பிரமணிய சுவாமி முக்கிய வீதிகளின் வழியே வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாளை மஞ்சள் நீராட்டு விழா விடும் சித்ரா பவுர்ணமி ஆண்டு பெருவிழா நிறைவடைகிறது. 23 அடி உயர முருகன் சிலை முன்பு பெரும்பாலான பக்தர்கள் தாங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளுடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post அரியலூர் அருகே அஸ்தினாபுரம் முருகன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Ashtinapuram ,Murugan ,Temple Chariot ,Ariyalur ,Asthinapuram ,Malaysia ,Chariot ,Chitrai ,Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.80 லட்சம்