- இரூர் பள்ளி
- Badalur
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பஞ்சாயத்து யூனியன் முதன்மை பள்ளி
- ஈருர்
- Alatur
- பெரம்பலூர் மாவட்டம்
பாடாலூர், ஏப். 24: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிந்து நேற்றுடன் விடுமுறை விடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே இரூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 5ம் வகுப்பில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவ, மாணவிகள் அடுத்த கல்வியாண்டில் வேறு பள்ளிகளுக்கு செல்ல இருப்பதால் இவர்களுக்கு பிரிவுபசாரம் மற்றும் வழியனுப்பு விழா நேற்று பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியை திலகவதி தலைமையில் நடந்த விழாவில் சக ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கேக் வெட்டி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியைகள் ஊட்டினர். மேலும் ஆசிரியைகளும் தங்களுக்குள் ஊட்டிக்கொண்டனர்.
அடுத்த பள்ளிக்கு செல்லும் நீங்கள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். மேலும் உயர்ந்த பணிகளுக்கு சென்று நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்று அறிவுரை வழங்கிய தலைமை ஆசிரியை திலகவதி, அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகம் பரிசாக வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஜெயசித்ரா, விமலா, ஆரோக்கியம், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் சுகன்யா, நந்தினி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post இரூர் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழியனுப்பு விழா appeared first on Dinakaran.