×

காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று தினம் கொண்டாட்டம்

காரைக்கால்,ஏப்.24: காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று தினம் கொண்டாட்டப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பாக வரலாற்று தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பாலாஜி தலைமை உரை வழங்க துறைத்தலைவர் சிந்தாமணி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினரான பேராசிரியர் ஜூலியஸ் விஜயகுமார் வரலாற்றின் முக்கியத்துவம்,அதன் சிறப்பம்சங்கள் மற்றும் உலகம் வளர்ச்சி அடைந்த விதம் பற்றி கூறி போட்டித் தேர்வுகளுக்கு வரலாற்று கற்றலின் அவசியத்தைப் பற்றியும் வலியுறுத்தினார். பேராசிரியர்கள் உரை மாணவிகளின் எதிர்கால சாதனைக்கு உற்சாகமூட்டுமாறு அமைந்தது. விழாவில் பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : History Day ,Government Women ,College ,Karaikal ,Government Women's College ,Day ,Department of History ,Avvaiyar Government Women's College ,Principal ,Balaji ,Karaikal Government Women's College ,Dinakaran ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை வேளாண் பயிற்சி