- கவாடி திருவிழா
- சட்டநாதபுரம்
- சந்தனா
- மாரியம்மன் கோவில்
- சீர்காழி
- சந்தன மாரியம்மன் கோவில்
- சட்டநாதபுரம்
- மயிலாதுதுரை மாவட்டம்
- சித்ரா பவுர்ணமி விழா
- உப்பநர்
- பால்குடம்
- பால்கவடி
சீர்காழி,ஏப்.24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் மெயின் ரோட்டில் புகழ்பெற்ற சந்தன மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு நேற்று உப்பனாற்றின் கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், பால்காவடி, அளவு காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை வந்து அடைந்தனர். அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.
The post சீர்காழி அருகே சட்டநாதபுரம் சந்தன மாரியம்மன் கோயிலில் காவடி திருவிழா appeared first on Dinakaran.