×

லடாக் எம்பிக்கு வாய்ப்பு மறுத்த பாஜ

புதுடெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் லடாக் மக்களவை தொகுதிக்கு அடுத்த மாதம் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியின் எம்பியாக இருக்கும் நம்கியாலுக்கு மீண்டும் போட்டியிடுவதற்கு பாஜ வாய்ப்பு வழங்கவில்லை. 370 சட்டப்பிரிவை ரத்து செய்தபோது பிரதமர் மோடி அரசின் முடிவை பாதுகாப்பதற்காக மக்களவையில் பேசி தலைப்பு செய்திகளில் இவர் இடம்பிடித்தார். இந்நிலையில் அவருக்கு மாறாக லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரான கியால்சனுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜ வாய்ப்பு வழங்கியுள்ளது.

The post லடாக் எம்பிக்கு வாய்ப்பு மறுத்த பாஜ appeared first on Dinakaran.

Tags : BJP ,Ladakh ,New Delhi ,Ladakh Lok Sabha ,Union Territory ,Namkyal ,Modi ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...