×

வாசியுங்கள்..நேசியுங்கள்..! உலக புத்தக தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக புத்தக தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி: புதிய உலகத்திற்கான திறவுகோல் – அறிவின் ஊற்று – கல்விக்கான அடித்தளம் – சிந்தனைக்கான தூண்டுகோல் – மாற்றத்திற்கான கருவி – மக்களை உணர வழிகாட்டி என புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தை தழைக்கச் செய்யும் கொடை. புத்தகங்களை வாசியுங்கள் – நேசியுங்கள்; பிறர்க்கு பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களை பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் – நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வாசியுங்கள்..நேசியுங்கள்..! உலக புத்தக தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,World Book Day ,Chennai ,M.K.Stal ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...