×

கார் மீது லாரி மோதி 3 பேர் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: நாகப்பட்டினம் மாவட்டம், பி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த சந்திரன் மகன் கார்த்திக்(20), மலைராஜ்(35), அக்கரைப்பேட்டையை சேர்ந்த மல்லையா மகன் ராஜசேகர்(25), சம்பாதோட்டத்தை சேர்ந்த சஞ்சீவ்காந்தி(25) ஆகியோர், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் மீன்பிடி படகு வாங்குவதற்காக நேற்று காரில் சென்றனர். காரை கார்த்திக் ஒட்டினார். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் தெற்கு குடியிருப்புக்கு செல்லும் விலக்கு ரோடு அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற கார்த்திக், காரில் அமர்ந்திருந்த மலைராஜ், ராஜசேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post கார் மீது லாரி மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Chandran son ,Karthik ,Malairaj ,BR Pattinam ,Nagapattinam district ,Malliya son Rajasekhar ,Akkaraipet ,Sanjivkanthi ,Sampathottam ,Daruwaikulam, Thoothukudi district ,
× RELATED நாகனேந்தல் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை