சென்னை: தடையில்லாமல் குடிநீர் வழங்க, கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சீராக குடிநீர் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தடையில்லாமல், குடிநீர் வழங்குவது மற்றும், கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, தலைமை செயலாளர், சிவதாஸ் மீனா, ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலகத்திலிருந்து, காணொளி காட்சி மூலம் பன்னிரண்டு மாவட்ட ஆட்சியர்களுடன் இந்த ஆலோசனையானது மேற்கொண்டுள்ளனர்.
தட்டுப்பாடின்றி, அனைவருக்கும் கிடைப்பதற்கான, அந்த ஏற்பாடுகளை செய்வதற்காகவும், போதிய அளவில், குடிநீர் இருப்பு இருக்கிறதா? என்பது தொடர்பாகவும், தற்போது, ஆய்வு கூட்டமானது, நடைபெற்று வருகிறது. சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தவாறு, மாவட்ட ஆட்சியர்களுடன், காணொளி காட்சி வாயிலாக, தலைமை செயலாளர், சிவதால் மீனா அவர்கள், இந்த ஆலோசனையை, மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், சென்னையின், குடிநீர் ஆதார இருக்கக்கூடிய ஏரிகளில், போதிய அளவில் நீர், குடிநீ நீர் இருப்பு இருக்கிறதா? என்பது தொடர்பாக, விரிவாக ஆலோசிக்க படுகிறது. ஏனென்றால், வெயில் அதிகமாக இருக்கக்கூடிய காரணத்தால் கோடை காலத்தில், குடிநீர் தட்டுப்பாடு ஏதும், இந்த குறிப்பிட்ட, அந்த நான்கு மாவட்டங்களில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அதே நேரத்தில், குடிநீர் இருப்பு, குடிநீர் பயன்பாடு, ஆகியவற்றை. எந்த அளவுக்கு மேற்கொள்ள வேண்டும்? என்பது ஆலோசனை கூட்டத்தில், விரிவாக, விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், சென்னைக்கு, ஒரு நாளைக்கு, ஒரு MLD அளவிற்கு, குடிநீர் தேவையானற இருக்கிறது அதே நேரத்தில் ஒரு மாதத்தில் கணக்கிடும் பொழுது ஒரு TMC தண்ணீர் சென்னைக்கு தேவையானது. இருக்கக்கூடிய சூழ்நிலையில், ஏழு TMC அளவிற்கு, குடிநீர் இருப்பானது இந்த நான்கு மாவட்டங்களில் இருக்கக்கூடிய காரணத்தினால், சென்னைக்கு வரக்கூடிய நாட்களில், இந்த கோடை காலங்களில், குடிநீர் தட்டுப்பாடு என்பது இருப்பதற்கான, வாய்ப்புகள், மிகக் குறைவாக இருப்பதாக, அதிகாரிகள் கணித்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில், மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி ஏதும், ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அந்த இருபத்து நான்கு வட்டங்களை உள்ளடக்கிய, பகுதிகளுக்கு கூட்டத்திலும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த குறிப்பிட்ட, அந்த வட்டங்களில்,குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், அருகில் இருக்கக்கூடிய பகுதியில் இருந்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறக்கூடிய, இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இது போன்று, கோடை காலத்தில், குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி இருக்கக்கூடிய மாவட்டங்களில், தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், அதன உடனடியாக சரி செய்வதற்கு, அரசு போர்க்கால நடவடிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகங்களுக்கு, மாவட்ட ஆட்சியருக்கும் தற்போது, சிவதாஸ்மீனா ஆலோசனையில், அறிவுரை ஆனது வழங்கி வருகிறார்.
The post கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.