டெல்லி: அதானி நிறுவன மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளது செபி விசாரணையில் வெளிவந்துள்ளது. அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எஃப்.பி.ஐ. நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது செபி ஆய்வில் அம்பலம் ஆகியது. அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய தகவல்களை மறைத்துள்ளன என்றும் செபி தெரிவித்துள்ளது. அதானி நிறுவனத்தில் முதலீட்டு வரம்புகள் மீறப்பட்டுள்ளதும் செபி விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
மோடியின் நெருக்கம் அதானியை இனியும் காப்பாற்றாது
மோடியின் நெருக்கம் அவரது நண்பரான அதானியின் சட்டவிரோத செயல்களுக்கு இனியும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செபி விசாரணை அறிக்கையின் முழு விவரத்தை வெளியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார். அதானி நிறுவனத்தில் முறைகேடு நடக்கவில்லை என செபி கூறி வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அழுத்தத்தினால் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் முறைகேட்டுக்கு ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளதால் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். விதிகளை மீறி பங்குச்சந்தையில் அதானி நிறுவனம் முதலீடு செய்து முறைகேடு செய்துள்ளதை செபி கண்டறிந்துள்ளது.
ஜூன் 4-க்கு பின் அதானி நிறுவன மோசடி அம்பலமாகும்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அதானி நிறுவன மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படும். அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் அனைத்தையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அம்பலப்படுத்தும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
The post அதானி நிறுவன மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.