×

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டாடா ஐபிஎல் சீசன்-2024 சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டு, பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

எம்.டி.வி. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம். பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

உழைப்பாளர் சிலையில் இருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை. அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புற சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புற சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sepakkam ,IPL cricket match ,Chennai ,Metropolitan Traffic Police ,Tata ,IPL season-2024 Chennai International Championship ,MLC ,Chennai. ,Chidambaram Cricket Ground ,IPL cricket ,Dinakaran ,
× RELATED முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி