- பாலக்காடு பக்வதி அம்மன் கோயில் பூரணம்
- பாலக்காடு
- கேரள மாநிலம்
- பாலக்காடு மாவட்டம்
- தச்சனாதுகர் திருவரைக்கால் பகவதி அம்மன் கோயில் பூரணம் திருவிழா
- பூரம் திருவிழா
- திருவரகாயல் பகவதி அம்மன் கோயில்
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தச்சநாட்டுக்கரை அடுத்த திருவாழியோர் திருவராய்க்கல் பகவதி அம்மன் கோயில் பூரம் திருவிழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. திருவாழியோர் திருவராக்கயல் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பூரம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் கடந்த 3 நாட்களாக பகவதி அம்மன் கோயிலில் பூரம் திருவிழாவை முன்னிட்டு விஷேச பூஜைகள் நடந்து வந்தன. இந்த நிலையில், நேற்று காலை 4 மணிக்கு நடைத்திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு அலங்கரித்த யானைகள் மீது அம்மன் செண்டை வாத்யங்களுடன் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயில் மைதானத்தில் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் யானைகள் மீது குடைமாற்றும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. விழாவில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு பகவதி அம்மனை வழிப்பட்டனர்.
The post பாலக்காடு பகவதி அம்மன் கோயில் பூரம் திருவிழா appeared first on Dinakaran.