திருப்போரூர்: சென்னை அருகே திருப்போரூர்-நெம்மேலி சாலையின் இரண்டு பக்கமும் தண்ணீர் சூழ்ந்து காணப்படும் என்பதால் அலுமினிய தகடுகளால் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக இங்குள்ள சாலை தடுப்புகளை தாண்டி தண்ணீர் கடந்து சென்றது.
இதனால் இரண்டு பக்கத்திலும் உள்ள தடுப்புகள் அனைத்தும் சரிந்து கிடக்கின்றன. இதனால் விபத்துக்கள் நடக்கும் என்ற அச்சத்தில் பயணிகள் பயணிக்கின்றனர்.எனவே, திருப்போரூர்-நெம்மேலி சாலையோரத்தில் சரிந்து கிடக்கும் சாலை தடுப்புகளை உடனடியாக சீரமைக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருப்போரூர்-நெம்மேலி சாலையில் சரிந்துள்ள தடுப்புகளால் விபத்து: சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.