- அம்மூர்
- ஒழுங்குமுறை
- மண்டபம்
- ராணிப்பேட்டை
- அம்மூர் ஒழுங்குமுறை
- ஆர்.என்.ஆர்
- அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம்
- தின மலர்
ராணிப்பேட்டை : அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5,067 நெல் மூட்டைகள் வரத்து.விற்பனை கூடத்தில் 75 கிலோ கொண்ட மூட்டை 606, ஆர்.என்.ஆர். ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,949க்கு விற்பனை ஆனது. ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று 5,067 நெல் மூட்டைகளை கொண்டு வந்தனர். நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் வருமாறு:
ஏடிடி 37 வகை ரக குண்டு நெல் குறைந்த பட்ச விலை ரூ.1,339க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1,509க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோ 51 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,109க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,491க்கும், 606 வகை ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,100 க்கும் மற்றும் அதிகப்பட்ச விலையாக ரூ.1,949க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1,769க்கும், சோனா ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,751க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,821க்கும், என்.எல்.ஆர் ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,729க்கும், ஸ்ரீ ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,879க்கும், அன்னபூரணி ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,786க்கும், வெள்ளை பொன்னி ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,708கக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,111க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும் விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே, விவசாயிகள் சோளம், கம்பு, உளுந்து, கேழ்வரகு, தேங்காய் கொப்பரை, நிலக்கடலை, எள்ளு ஆகிய விவசாய பயிர்களையும் அறுவடை செய்து அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.
The post அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 606, ஆர்.என்.ஆர் ரக நெல் அதிகபட்சமாக ₹1949க்கு விற்பனை appeared first on Dinakaran.