×

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI நிறுவனங்கள் விதிமீறல்: முதலீட்டு வரம்புகள் மீறப்பட்டுள்ளதும் செபி ஆய்வில் அம்பலம்

டெல்லி: அதானி நிறுவனத்தின் முதலீடு செய்துள்ள 10 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முக்கிய தகவலைகளை மறைத்ததையும் முதலீட்டு வரம்புகளை மீறி இருப்பதையும் இந்திய பங்கு சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி கண்டுபிடித்துள்ளது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களில் செபி விதிகளுக்கு உட்பட்டு முதலீடு செய்கின்றன. இந்நிறுவனங்கள் FPI அதாவது வெளிநாட்டு போர்ட் போலியோ முதலீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இண்டன் பார்க் அறிக்கை குற்றசாட்டுகளை அடுத்து 2023 முதலே அதனை குழுமத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை செபி ஆய்வு செய்து வந்தது. சுமார் 12 வெளிநாட்டு நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை கொடிது காட்டியுள்ள செபி பல்வேறு விதிமீறல்கள் மற்றும் முதலீட்டு வரம்பு மீறல்களை கண்டறிந்தது. அதனை குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட தகவல்களை அவை பராமரிக்க தவறியதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதை அடுத்து விதி மீறல்கள் பற்றி விளக்கம் தருமாறு இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள 12 வெளிநாட்டு நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் மட்டும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் அபராதம் செலுத்துவதன் மூலம் தீர்வுகான விரும்புவதாக எழுத்து பூர்வ கோரிக்கையின் மூலம் செபி அமைப்பை அணுகியுள்ளன. பத்திர சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள். அபராதம் மூலம் தீர்வுகான விண்ணப்பம் செய்து இருந்தாலும் அதனை ஏற்று கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்து செபி அமைப்புதான் முடிவு செய்யும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். செபி மற்றும் FPI கள் இடையே பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் அதன் 4 விசாரணைக்கு முடிவை ஏற்படுத்தலாம்.

 

The post அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI நிறுவனங்கள் விதிமீறல்: முதலீட்டு வரம்புகள் மீறப்பட்டுள்ளதும் செபி ஆய்வில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : FPI ,Adani Group ,SEBI ,Delhi ,Adani ,Dinakaran ,