- சுலான் ஆறு
- Walangaiman
- தமிழ்நாடு அரசு
- வலங்கைமான்
- விதிசாச்சிபுரம்
- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- தின மலர்
* நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது
* தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு
வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் சுள்ளன் ஆற்றில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் பொதுமக்கள் தமிழக அரசுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாதிரிபுரம் மற்றும் சின்னகரம் ஆகிய குக்கிராமங்களை இணைக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தி.மு.க ஆட்சியில் அப்போது மூங்கில் தட்டிபாலத்தினை அகற்றிவிட்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று சிறிய வண்டி பாலம் கட்டப்பட்டது.
பாலத்தை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாது சுள்ளன் ஆற்றிற்கு தெற்கே உள்ள சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் நெல் உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதற்கு பாலம் முக்கியமாக பயன்பட்டு வந்தது.மேலும் வேளாண்மை பணிகளுக்கு டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் செல்வதற்கு இந்த பாலத்தினை பயன்படுத்தி வந்தனர். வலங்கைமான் குடவாசல் சாலையில் இருந்து கும்பகோணம் மன்னார்குடி சாலைக்கு செல்லும் விதமாக இணைப்பு பலமாகவும் இந்த பாலம் பயன்பட்டு வந்தது.
இந்நிலையில் காலப்போக்கில் பாலம் பழுதடைந்து பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் முற்றிலும் உடைந்த நிலையில் காணப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் அச்சத்துடனே பாலத்தினை பயன்படுத்தி வந்தனர்.குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள், முதியோர்கள் இந்த பாலத்தை கடக்கும்போது அச்சத்துடன் பயணித்தனர்.
இது தொடர்பாக பொது மக்களின் கோரிக்கை அப்போது தினகரனில் படத்துடன் செய்து வெளியானது. இதையடுத்து பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 2022-23 நிதி ஆண்டில் சுள்ளன் ஆற்றில் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததையடுத்து அப்போது பாலம் கட்டுப்பணி துவங்காத நிலையில்தற்போது பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் முதற்கட்டமாக பழுதடைந்த நிலையில் இருந்த பழைய பாலம் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து தற்போது பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை முடிவிற்கு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பழுதடைந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
* சுள்ளன் ஆற்றிற்கு தெற்கே உள்ள சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் நெல் உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதற்கு பாலம் முக்கியமாக பயன்பட்டு வந்தது.
* மேலும் வேளாண்மை பணிகளுக்கு டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் செல்வதற்கு இந்த பாலத்தினை பயன்படுத்தி வந்தனர்.
* வலங்கைமான் குடவாசல் சாலையில் இருந்து கும்பகோணம் மன்னார்குடி சாலைக்கு செல்லும் விதமாக இணைப்பு பலமாகவும் இந்த பாலம் பயன்பட்டு வந்தது.
The post வலங்கைமான் அருகே மூங்கில் தட்டிபாலத்தை அகற்றி விட்டு சுள்ளன் ஆற்றில் ₹2.57 கோடியில் புதிய பாலம் appeared first on Dinakaran.