×

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 19-ந்தேதி சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின் நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.145 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,700-க்கும் ஒரு சவரன் ரூ.53,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2.50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

The post தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!