- VAO இரண்டும்
- Tiruppuvanam
- வெள்ளிக்கரை
- கண்ணன்
- மாரிஸ்வரன்
- முத்துராஜா
- ஆனந்த்
- வில்லிகரை
- அல்லிநகரம்
- சுந்தரி
திருப்புவனம், ஏப்.23: திருப்புவனம் அருகே வெள்ளைக்கரையில் கடந்த 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது வெள்ளைக்கரையைச் சேர்ந்த கண்ணன் மகன் மாரீஸ்வரன் மற்றும் முத்துராஜா மகன் ஆனந்த் இருவரும் தேர்தல் பணியில் இருந்த அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி என்பவருடன் தகராறு செய்தனர். இதுபற்றி திருப்புவனம் போலீசில் சுந்தரி பணி செய்யவிடாமல் தன்னை தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் செய்துள்ளார். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
The post விஏஓவிடம் தகராறு செய்த 2 பேர் கைது appeared first on Dinakaran.