- கோரனாட்டு
- கருப்பூர்
- சுந்தரேஸ்வரசுவாமி கோயில்
- தேர்
- கும்பகோணம்
- சித்திரப் பௌர்ணமி பிரம்மோட்சவம் விழா
- அபிராமி அம்பிகா சமீதா
- பெட்டிக்கலியம்மன்
- கோரனதுகருபூர்
- சுவாமி திருவீதியுலா
- கோரநாட்டு கருப்பூர் சுந்தரேஸ்வரசுவாமி கோயில் தேரம்
கும்பகோணம், ஏப்.23:கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூரில் உள்ள பெட்டிகாளியம்மன் தலமான அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரசுவாமி கோயிலில் சித்ரா பவுர்ணமி பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, 9ம் நாளான நேற்று உற்சவர் சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளினர். திருப்பணியாளர் சென்னை மதி மகாலட்சுமி சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, துணைத்தலைவர் பெரிய சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், செயல் அலுவலர்கள் கணேஷ்குமார், ஆறுமுகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
இந்த தேரோட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா என்ற கோஷமிட்டு வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
The post கொரநாட்டு கருப்பூர் சுந்தரேஸ்வரசுவாமி கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.