- மகா மாரியம்மன் கோயில் தேர்
- குன்னம்
- கருகுடி
- குன்னம் மாவட்டம்
- பெரம்பலூர் மாவட்டம்
- மகா மாரியம்மன் கோயில்
- வெல்லோதம்
- கணபதி ஹோமாம்
- மஹா மாரியம்மன் கோயில்
குன்னம் ஏப்.24: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை 10.30 மணி அளவில் கணபதி ஹோமம் செய்யப்பட்டு தேரின் மீது மகா கும்பாபிஷேகம் செய்யட்டது. பல சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தேர் வடம்பிடித்து முக்கிய தெருக்கள் வழியாக வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த மாதம் மே 13ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கி அடுத்த மாதம் மே 22ம்தேதி திருத்தேர் வீதி உலா நடைபெற உள்ளது. அதற்காக தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
The post குன்னம் அருகே மகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம் appeared first on Dinakaran.